2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம்

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாவனையாளர் அதிகார சபையின் சட்டத்தை மீறி, பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஏழு வர்த்தகர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன,; வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்தார்.

மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் தாக்கல் செய்த ஏழு வழக்குகள், வியாழக்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்பட்டது.

காலாவதியான மென்பானம், பிஸ்கட், ஒடியல்மா, சிறுவர்களுக்காக முகப்பூச்சு பவுடர் போன்ற பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இதன்போது மன்றில் ஆஜராகினர்.

வர்த்தகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் மன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் குற்றத்தினை ஏற்றுக்கொண்டதையடுத்து நீதவான் அபராதம் விதித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X