2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சட்டத்தை மீறிய 8 வர்த்தகர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறிய 8 வர்த்தகர்களுக்கு, 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார்.

இதேவேளை, வழக்குக்கு சமூகமளிக்காத இரண்டு வர்த்தகர்களுக்கு பிடியாணை பிறப்பித்தும் உத்தரவிட்டார்.

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி  தனசேகரம் வசந்தசேகரம் தலைமையில் சென்ற குழுவினர், அளவெட்டி மற்றும் பண்டத்தரிப்புப் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 10 வர்த்தகர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (18) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் 8 வர்த்தகர்கள், மன்றில் ஆஜராகி, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, காலாவதியான பிஸ்கட்கள் மற்றும் சொக்லெட்டுக்களை விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் காலாவதியான நல்லெண்ணெய் போத்தலின் மீது மீளவும் புதிய திகதியை இட்டு விற்பனை செய்த வர்த்தகருக்கு 3 ஆயிரம் ரூபாயும் 1 கிலோ பருப்புக்கு கட்டுப்பாட்டு விலையை அரசாங்கத்தால் 169 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 180 ரூபாய்க்கு விற்பனை செய்த 3 வர்த்தகர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை, நிதிமன்றத்தில் ஆஜராகாத 2 வர்த்தகர்களுக்கும் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X