2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மண் அகழ்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொண்டமானாறு அக்கரை கடற்ரையில் தனியார் ஒருவரின் காணி ஒன்றில் ,ருந்து அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரத்தில் மணல் அகழ்ந்து பொதுத்தேவைக்கு எடுத்து செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் புதன்கிழமை (09) மாலை ஈடுபட்டனர்.

கடற்கரையினை அண்மித்த தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றில் ,ருந்து கனரக ,யந்திரங்களின் உதவியுடன் மணல் அகழப்பட்டு, அச்சுவேலி பிரதேச பொதுச்சந்தை மற்றும் புன்னாலைக்கட்டுவன் போன்ற ,தர பகுதிகளிலுள்ள பொது,டங்களில் நீர் தேங்கியுள்ள ,டங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு கொட்டப்பட்டது.

இதனால்,இப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கும் அப் பகுதி மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் செயலாளர், தோண்டப்பட்ட இடத்தில் மணல் கொட்டி சீர் செய்து தருவதாக உறுதியளித்ததையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .