2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சந்தேகநபர்களில் நால்வர் சரணடைந்தனர்

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அருகில் கடந்த 25ஆம் திகதி, இண்டு நபர்களை  இரும்பு கம்பியால் குத்தி படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர்,  செவ்வாய்க்கிழமை (03) சரணடைந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய  ஐவர் தேடப்பட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரு இளைஞர் தரப்புக்கு இடையில் நீண்ட காலமான இடம்பெற்று வந்த சிறுபிரச்சினை கடந்த 25ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று, நாவலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் மாலை இரும்புக்கம்பி தாக்குதலில் முடிவடைந்தது.

இச் சம்பவத்தில், நவாலி கிழக்கு பதியைச் சேர்ந்த கிறிஸ்தோபர் பிரனீத் (வயது 35) மற்றும் அதேபகுதியினை சேர்ந்த எஸ்.வின்சன் (வயது 22) ஆகிய இருவரும் இரும்புக்கம்பி குத்துக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் பிரனீத் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நால்வர் பொலிஸில் சரணடைந்துள்ளதை அடுத்து, அவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X