2025 ஜூலை 19, சனிக்கிழமை

சந்தேகநபர் கைதானதால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Niroshini   / 2016 ஜனவரி 13 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேகநபரை புதன்கிழமை (13) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கடந்த 08 ஆம் திகதி பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில், கற்கோவளம் பகுதிக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தரை அப் பகுதியைச் சேர்ந்த நபர் கடுமையாக தாக்கியிருந்தார்.

இச் சம்பவத்தில் கதிர்காமத்தம்பி சிவதரன் என்ற உத்தியோகத்தர் காயங்களுக்குள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந் நிலையில் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று புதன்கிழமை (13) பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படவிருந்தது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் பல வகைகளில் முயற்சிகள் மேற்கொள்ள முயற்சித்திருந்தனர். இதற்கு ஆர்ப்பாட்ம் செய்ய முயன்றவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந் நிலையில் துரித விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார், சந்தேகநபர் கடற்கரைப்பகுதியில் ஒழித்திருந்தபோது அவரை கைதுசெய்தனர்.

இதனால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X