2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சமூகத்தைச் சீரழிக்கின்ற சமூகம் ஒன்று உருவாகிவிடக்கூடாது

Niroshini   / 2016 மே 08 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சமூகத்தைச் சீரழிக்கின்ற சமூகம் ஒன்று உருவாகிவிடக்கூடாது என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற முன்னாள் நீதவானும் கெப்பிட்டிப்பொல நீதவான் நீதிமன்ற நீதவானுமான ஏ.ஜே.பிரபாகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரணைமடுவில் அமைந்துள்ள 'நெலும்பியச' கட்டடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேஅவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நான் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றியபோது, சிறுவர் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகள் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றை கூர்ந்து நோக்கும் போது அவர்களுடைய குடும்பம் மற்றும் சமூக சூழல் காரணமான வழக்குகளே அதிகம் காணப்பட்டன. அச்சூழலாலேயே அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கு பெரியவர்களே காரணமாகவுள்ளனர்.

சிறுவர்கள் தொடர்பாக இறுக்கமான சட்ட நடைமுறைகள் காணப்படுகின்றன. எனவே, கடுமையான தண்டனைகளே குற்றவாளிகளுக்கு வழங்கப்படும்.

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X