2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சம்பந்தன் என்றவுடன் ஏன் கன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும்

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி வடமாகாண சபையில் இதுவரை காலமும் அவதூறாக எவ்வளவு பேசியபோதும், அதனை கன்சாட்டில் இருந்து நீக்காத நீங்கள், ஏன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பெயர் வந்தவுடன் கன்சாட்டில் இருந்து நீக்குகின்றீர்கள்?” என வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் கேள்வி எழுப்பினார்.

“எதிர்வரும் 12ஆம் திகதி இந்தியா செல்லும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் சிங்கள பேரினவாதத்துக்கும் எதிராகவும் தமிழக மக்கள் கொந்தளிக்க வேண்டும், போராட்டங்கள் நடத்தப்படவேண்டும்” என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட சயந்தன்,

“உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களை பேசி, வன்முறைகளை ஏற்படுத்த வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மக்கள் மடியும் போது, தமிழக மக்கள் கடல் தாண்டி வந்து எங்கள் மக்களை காப்பாற்றினார்களா? சுயஇலாப அரசியலில் அவர்கள் பேசுகின்றனர். ஆகவே, சிவாஜிலிங்கம் சொன்ன விடயம் கன்சாட்டில் இருந்து நீக்கப்படவேண்டும்” என்றார்.

அதனை ஏற்றுக்கொண்ட சி.வி.கே.சிவஞானம், கன்சாட்டில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இதன்போது கருத்துக்கூறிய தவநாதன்,

“இதுவரைகாலமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி தொடர்பான அவதூறாக பல்வேறு விடயங்கள் இந்தச் சபையில் கதைக்கப்பட்டும் அவை கன்சாட்டில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால், ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் செல்கின்றார் என்பதற்காக சிவாஜிலிங்கம் சொன்ன விடயத்தை கன்சாட்டில் இருந்து நீக்குகின்றீர்களா?” என கேட்டார்.

அதனை இலாவகமாக சமாளித்த அவைத்தலைவர், நீங்கள் நீக்குமாறு கோரினால் அந்தத் தருணங்களில் நீக்க வேண்டியவற்றை நீக்குவோம். மற்றப்படி எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X