Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
“யாழ் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் அரசியல் சிபாரிசுகளை கணக்கில் எடுக்காது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கே வீட்டுத் திட்டம் வழங்கப்படும்” என யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் அரசியல் கட்சி அலுவலகங்களில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர் என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் மாவட்டச் செயலாளரிடம் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழில் வீட்டு வசதிகள் அற்றவர்கள் வீட்டுத் திட்டம் கோரி பிரதேச செயலகங்களில் பதிவு செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் விபரம் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மாவட்டத்துக்கு கிடைக்கும் வீடுகளில் இருந்து நியாயபூர்வமான தகமையின் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
அதனை விட எந்தக் கட்சியானாலும் அல்லது எந்த அரசியல்வாதிகளிடம் சென்று பதிவுகளை மேற்கொண்டாலும் அதனை நாம் கணக்கில் எடுக்க மாட்டோம்.
அவ்வாறு தற்போது அவர்கள் பதிவுகளை மேற்கொள்வது, அவர்களின் அரசியல் செயற்பாடு என்பதனால் நாம் அதில் தலையிட முடியாது. ஆனால் எந்த அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. என்பதனை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago