2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

வல்வெட்டித்துறை பகுதியில் பாடசாலை செல்லும் 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 75 வயதுடைய முதியவர் மற்றும் 45 வயதுடைய சித்தப்பா முறையிலான இருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில், வைக்குமாறு, பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் ஊடகவே வல்வெட்டித்துறை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் மடத்தில் பணிபுரியும் 75 வயதுடைய முதியவர் குறித்த சிறுமிக்கு அலைபேசி ஒன்றை வாங்கி அதனுள் சிம் அட்டையையும் இணைத்து அலைபேசியை வாங்கி கொடுத்துள்ளார்.

குறித்த சிறுமி பாடசாலைக்கு அலைபேசியை எடுத்து சென்றுள்ள நிலையிலேயே குறித்த விடயம் ஆசிரியர் ஊடாக தெரியவந்துள்ளது. பின்னர் சிறுமியைப் பிடித்து விசாரணை செய்த போது முதியவர் பாலியல் துன்புறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், உறவு முறையிலான சித்தப்பா ஒருவரும் உடல், உள ரீதியில் துன்புறுத்தல் வழங்கியமையை சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து, இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றின் கட்டளை பெறவுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸார், கைதான இருவருரையும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது, 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .