2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுமியைக் கடத்த முற்பட்டவர் நையப்புடைப்பு

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா, எம்.றொசாந்த்

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டப்பட்டு நபர் ஒருவரை நாவாந்துறைப் பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த நபர் கடந்த வாரம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், இன்றும் அதே நோக்கோடு அந்தப் பகுதிக்கு வந்தார் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று (30) முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியுள்ளார். அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று அங்கு நின்ற சிலர் தெரிவித்தனர்.

அதனால் நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த நபர் தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X