2025 மே 19, திங்கட்கிழமை

சிறுமி துஸ்பிரயோகம் : சந்தேக நபர் கைது

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 28 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கோப்பாய் பொலிஸார் இன்று (28) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்,

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறுமியின் தந்தை, தாயிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில் சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

அந்நிலையில், குறித்த வீட்டுக்கு வேறொரு நபர் வந்து சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நேரங்களில், சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அது தொடர்பில் சிறுமி தனது தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இருந்த போதிலும் தாயார் அது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் சிறுமி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை மீட்ட பொலிஸார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதுக்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்த போது சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று இரு மாதங்களான நிலையில் சந்தேகநபர் நேற்று (27) யாழில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிஸார் அறிந்து கொண்டுள்ளனர். அதனை அடுத்து சந்தேக நபர் இன்று (28) வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வானையும் பறிமுதல் செய்தனர்.

குறித்த நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X