2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸார் கைது

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், டி.விஜிதா

யாழ்.இணுவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இணுவில் பகுதியில் தைப்பொங்கல் தினமான கடந்த செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலேந்திரன் பாலசந்திரன் (வயது 48), பாலசந்திரன் தனுஜனி (வயது 44), அவர்களின் பிள்ளைகளான பாலசந்திரன் சுஜன் (வயது 12) மற்றும் பாலசந்திரன் திபுஷா (வயது 08) ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர்.

அதேவேளை இவர்களுடன் விபத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தரான ரி.திவாகரனும் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  நேற்று (16) புதன்கிழமை பாலசந்திரன் சுஜன் எனும் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரி.திவாகரன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை முற்படுத்த சுன்னாக பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X