2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிவபூமி முதியோர் இல்லத்தின் 12ஆவது ஆண்டு நிறைவு விழா

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சரவணப் பொய்கை நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவும், வௌ்ளிக்கிழமை (06) பிற்ப்பகல் 3 மணிக்கு, சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில், வைத்தியநிபுனர் திருமதி வசந்த மாலிகா கருணாகரன், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் கொன்சலேட் ஜெனரல் ச.பாலச்சந்திரன், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், சங்கானை பிரதேச செயலாளர் திருமதி பிறேமினி பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் “இப்பிறவி தப்பினால்” எனும் தலைப்பில் கவியரங்கும் திருமதி சிறிதேவி கண்ணதாசனின் நெறியாள்கையில் பொன்னாலை சந்திரபரதகலாலயத்தின் நடன நிகழ்வும் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .