Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (20) பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்றும் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.
யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் நேற்று (21) இரவு வந்த கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை (19) கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹயஸ் ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன. குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (20) நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் அண்மைக்காலமாக வீடுகளின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலைமை ஏற்பட்டு உள்ளது.
அதேவேளை, பொலிஸ் விசேட குழுக்கள் தீவிர விசாரணைகளிலும் வீதி சோதனை நடவடிக்கைகைகளிலும் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
5 hours ago