2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்றனர்’

Editorial   / 2019 மார்ச் 04 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாம் செய்த பாவங்களுக்கு இந்தியாவுக்குச் சென்று ஆலயங்களில் பிராயச்சித்தம் தேடுவதாக பார்க்கின்றோம் என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தாயகத்தில் ஆலயங்கள் இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில் பௌத்தமயமாக்கலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு இங்குள்ள ஆலயங்களைப் புனரமைப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்காகவோ எதனையும் செய்யவில்லை. அவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்த யாரும் தயாராகவும் இல்லை. யுத்தத்தால் எல்லாவற்றையும் மக்கள் இழந்து மிகதுன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த யுத்தத்தின் இறுதிக்கட்டங்களிலிருந்த மக்களின் கோடிக்கணக்கான பணம் எங்கே என தெரியாது. இவ்வாறிருக்கையில் இவற்றையெல்லாம் செய்தவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்தவர்களுமான மஹிந்த ராஐபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்தியாவுக்குச் சென்று திருப்பதியில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அத்தோடு அன்பளிப்புப் பொருட்களையும் வழங்கியிருக்கின்றனர் என தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X