Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும் அவர்களது செழுமைக்காகவும், வரவு - செலவுத் திட்டம் (பாதீடு) மூலமாக 47.37 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். மாநகர சபையில் எதிர்க்கட்சியாக உள்ள த.தே.ம.மு, இந்தப் பாதீட்டை எதிர்த்திருந்த நிலையில், அதை எதிர்த்தமைக்கான காரணங்களை விளக்கி, ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தப் பாதீடு, கடந்த வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், "ஆளும் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டை, எதிர்த்தரப்பு எதிர்க்கவே வேண்டும் என்ற, எழுதாத நியதியை நாம் கடைப்பிடிக்கவில்லை" எனக் குறிப்பிட்ட அவர், அப்பாதீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் என்று, தான் கருதும் விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், கடை உரிமங்கள் மூலம் சபைக்கு 130 மில்லியன் ரூபாய் கிடைக்கும் என்றும் காட்டப்பட்டிருந்த போதும், அதன் மூலம் எந்த வருமானமும் சபைக்கு கிடைக்கவில்லையெனத் தெரிவித்த அவர், இந்த நிலையில், அடுத்த பாதீட்டில், அது 485.26 மில்லியன் ரூபாயாக காட்டப்பட்டுள்ள நிலையில், மேலதிக வருமானமாகக் காட்டப்பட்டுள்ள 355.26 மில்லியன் ரூபாயைப் பெற்றுக் கொள்வதில் உறுதிப்பாடு இல்லையெனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், விறாந்துக் கட்டணமாக, இவ்வாண்டில் 10 மில்லியன் ரூபாய் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதம், அதன் மூலம் எந்த வருமானமும் சபைக்கு கிடைக்கவில்லையெனவும், அடுத்தாண்டில் அது 9.26 மில்லியன் ரூபாயாகக் கிடைக்குமெனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதுவும் கிடைக்குமென் உறுதிப்பாடு இல்லையெனவும் தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டில், சபைக்கான அடுத்தாண்டு வருமானமாக, 911.12 மில்லியன் ரூபாய் குறிப்பிடப்பட்ட போதிலும், சபையின் வருமானமாக, 528.04 மில்லியன் ரூபாய் தான் உறுதியாகக் கிடைக்கும் எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செழுமைக்கு...
இதேவேளை, உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் தொடர்பாகவும், அவர் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“சபையில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும் அவர்களது செழுமைக்காக பல்வேறுபட்ட தேவைகளுக்காக, இந்த வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை 47.37 மில்லியன் ரூபாய் ஆகும். இந்தச் செலவுத் தொகை, குறிப்பிடப்பட்ட வருமானத்தின் 5.2 சதவீதமாகும்.
“அதே நேரம், மக்களை நேரடியாகச் சென்றடையும் உட்கட்டுமான அபிவிருத்திகளுக்காக, வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை, 185 மில்லியன் ரூபாயாகும்" என, அவர் விமர்சித்தார்.
அதேபோல், உறுப்பினர்களின் கடல்கடந்த பயிற்சிகளுக்காக, 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், உறுப்பினர்களின் திறன்களை விருத்திசெய்ய வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்ற போதிலும், "யாழ். மாநகரம் உள்ள நிலையில், மக்களின் மீது வீண் வரிச்சுமைகளைச் சுமத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நாம் வெளிநாட்டில் பயிற்சிக்குச் செல்வது என்பது ஏற்புடையது அல்ல. எமது திறனை, நாமே விருத்தி செய்ய வேண்டும். அவ்விருத்தி, மக்களின் வரிப்பணத்தில் இருந்து நாம் பெற்றதாக இருத்தல் விரும்பத்தக்கது அல்ல" என, அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago