2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு

Gavitha   / 2017 மே 06 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில், வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர்.

இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதால் இடம்பெற்ற குறித்த விபத்தில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரான துரைராஜசிங்கம் (வயது 33) என்பவர் உயிரிழந்துள்ளார்.

விடுமுறை பெற்று இளவாலையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் பணியில் இணைவதற்காக தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, சித்தங்கேணி பகுதியில் குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த விபத்தில், இரு மோட்டார் சைக்கிளிலும் வந்த நால்வரும் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக, இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X