2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சுகாதார நலன்பேணாத வர்த்தகர்களுக்கு அபராதம் விதிப்பு

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டமை மற்றும் சுகாதார நலன்பேணாத உணவக, வெதுப்பக மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன்இ வியாழக்கிழமை (03) தீரப்பளித்தார்.

அச்சுவேலி இராச வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தமை, மற்றும் உடல் நலத்துக்கு தீங்கான உணவினை விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  

அத்துடன் உணவகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தமை போன்ற ஏனைய 15 குற்றச்சாட்டுக்கள் மீதான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு தவணையிட்ட நீதிவான், உணவக உரிமையாளரை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

அச்சுவேலி பகுதியிலுள்ள உணவக உரிமையாளருக்கு, 5 குற்றச்சாட்டுக்களுக்காக தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நகரப் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தில் சரியான முறையில் பொருட்களை களஞ்சியப்படுத்த தவறி, பாவனையாளர் நலன்பேணாத வகையில் உணவுப் பொருட்களை வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அச்சுவேலி, தோப்பு பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில், உற்பத்தி பணியாளர்கள் தொப்பி, அபரோன் இன்றி வெதுப்பக பொருட்களை உற்பத்தி செய்தமைக்காக அதன் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X