2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிசுவைக் கைவிட்ட தாய் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும்  தாயை இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சிசு தனக்குப் பிறக்கவில்லையென்று கணவர் சண்டையிட்டமையால், சிசுவை  வீதியில் விட்டுச் சென்றதாக அத்தாய்; கூறியுள்ளார்.

சைக்கிளொன்றில் வந்தவர்கள் சிசுவை அப்பகுதியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். சிசுவை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இத்தாயைக் கைதுசெய்துள்ளனர்.

குறித்த தாய்; மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X