2025 ஜூலை 19, சனிக்கிழமை

சுண்டிக்குளத்தில் இறால் பிடிக்கத்தடை

Thipaan   / 2016 ஜனவரி 14 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில், சுண்டிக்குளம் கடல்நீரேரியில் இறால் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சுண்டிக்குளம் கடல் நீரேரிப் பகுதியில் இறால்கள் குறைவாகவுள்ளன. இதனால் இறால்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட காலத்தில் இறால் பிடியில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும், இது தொடர்பில் பளை மற்றும் கிளிநொச்சி பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X