2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுத்திரிகரிப்பு தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

George   / 2016 மார்ச் 03 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்காலிக சுத்திரிகரிப்பு தொழிலாளர்களாக கடமையாற்றி வரும் 130 தொழிலாளர்கள், தங்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை (03) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

'கடந்த ஐந்து வருடங்களாக, நாளாந்தம் 930 ரூபாய் என்ற கூலிக்கு கடமையாற்றி வரும் எங்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்கப்படும் என முன்னாள் மாநகர சபை ஆணையாளராக செல்லத்துரை பிரணவநாதன் கடமையாற்றிய காலத்தில் கூறப்பட்டது.

தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தற்போதைய மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோரும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தனர்.

ஆனால், இன்றுவரையில் எங்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை. இதனால், எங்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் வரையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளோம்' என சுத்திரிகரிப்பு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X