2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சூது விளையாடியவர்களுக்கு அபராதம்

George   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள வீடொன்றில் சூது விளையாடிய 7 பேருக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வெள்ளிக்கிழமை (05) தீர்ப்பளித்தார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்துசந்திப்பகுதியில் இரவு நேரம் சூது விளையாடி ஏழுபேரும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதன் போது இவர்களிடம் இருந்து 2 இலட்சத்து 39ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரசுடைமையாக்கிய நீதிவான், சந்தேகநபர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X