2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சுன்னாகத்தில் வாள்வெட்டு: பொலிஸார் இருவர் படுகாயம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் சந்தை பகுதியில், மர்ம நபர்கள் இருவரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகட்டையும், முகத்தையும் துணியால் மறைத்தபடி வந்த இருவரே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X