2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலைக்கு அஞ்சலி

Niroshini   / 2016 மே 15 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை (14), நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவு தூபி முன்பாக சுடரேற்றப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீது கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி இலங்கை விமான படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசின. அதில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 360க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

இதனை நினைவுக்கூரும் முகமாகவே, கடந்த 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதற்கமைய, மக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு இடங்களில்  சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X