Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் கொலை தொடர்பிலான சான்றுப்பொருட்களை குற்றப்புலனாய்வு பொலிஸார் திங்கட்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மாணவர்கள் பயணித்த 100 சிசி கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் அங்கிருந்த பெறப்பட்ட தடயப் பொருட்கள் என்பன இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு திங்கட்கிழமை (24) சென்ற குற்றப்புலனாய்வு பொலிஸார், விசேட அதிரடிப் படையினிரின் உதவியுடன் சான்றுகள் தொடர்பில் ஆய்வு செய்திருந்தனர். அதன்பின்னர் சான்றுபொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு கீழ், தனியான விசாரணைகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago