2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சேறு காரணமாக மீன்பிடியில் ஈடுபடமுடியவில்லை

Gavitha   / 2016 மார்ச் 13 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நந்திக்கடலில் காணப்படும் சேறு காரணமாக தாம் பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக, குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனர்கள் தெரிவித்துள்ளனர்.

நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டு தொழில் முயற்சிகள் அதிகரிக்கப்படவேண்டுமென கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்களிடம் மனுக்களை கையளித்துள்ளனர்.

எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை.

நந்திக்கடலை நம்பி 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். நந்திக்கடலில் பெருமளவு சேறு நிறைந்திருப்பதன் காரணமாக தொழிலில் ஈடுபடுவதில் இடர்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் கடற்றொழிலாளர்கள் நந்திக்கடலினை ஆழமாக்கி தொழில்முயற்சிகளுக்கு உதவவேண்டுமென அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறால் உற்பத்தியில் முக்கிய இடமாக நந்திக்கடல் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X