2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சிறைச்சாலைக்குள் கஞ்சாவுடன் சென்ற பெண் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

50 கிராம் கஞ்சா பொதியினை 500 கிராம் மிக்சர் பக்கெற்றுக்குள் மறைத்து, சிறைச்சாலைக்குள் கொண்டு சென்ற அல்லைப்பிட்டி வெண்புரவி மீள்குடியேற்றப்பகுதியினை சேர்ந்த பெண்ணை, புதன்கிழமை (21) மாலை கைதுசெய்த சிறைச்சாலை அதிகாரிகள், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வெண்புரவி மீள்குடியேற்றப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்கு வந்த போது,  தெரிந்த ஒருவர், இந்த உணவுப் பொதியினை சிறைச்சாலையிலுள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு கூறி கொடுத்தாக, கைதுசெய்யப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

உணவு பொதியினைக் கொடுத்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X