2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிறுமியை வன்புணர முயன்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறை

Gavitha   / 2016 நவம்பர் 02 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (01) தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நட்ட ஈடு செலுத்துமாறும், நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்ட மட்டுவில் பகுதியில், பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த பதின்மவயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்த இருவர் முயற்சி செய்துள்ளனர்.

அவர்களிடருந்து தப்பிச் சென்ற சிறுமி இது குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தியதும், பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அதேபகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 4 வருடங்களாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில், தவணை முறையில் இடம்பெற்று வந்திருந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலப்பகுதியில் சந்தேகநபர் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.

ஒரு சந்தேகநபருக்கு எதிராக மேற்கொண்ட மேலதிக விசாரணை, நிறைவுக்கு வந்த நிலையில், சந்தேகநபருக்கு எதிராக போதிய சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நிறுவியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X