2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிறையிலிருக்கும் கணவருக்கு கஞ்சா கொண்டு செல்ல முற்பட்ட பெண் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 29 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு, பிஸ்கட் பையினுள் வைத்து கஞ்சா கடத்த முற்பட்ட பெண்ணைக் குழந்தையுடன் கையும் மெய்யுமாகப் பிடித்த சிறைச்சாலை அதிகாரிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்கு மேற்படி பெண், நேற்றுத் திங்கட்கிழமை (28) மதியம் உணவு தயார் செய்துகொண்டு சென்றுள்ளார்.

இதன்போது, 38 கிராம் 79 மில்லிகிராம் கஞ்சாவினை பிஸ்கட்டுக்குள் மிகசூட்சுமமான முறையில் வைத்துகொண்டு செல்ல முற்பட்டுள்ளார்.

உணவுப் பொருட்களை சோதனையிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த பிஸ்கட் பையொன்றினைப் பிரித்துப் பார்த்த போது, கஞ்சாவைக் கடத்திச் செல்ல முற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி பெண்ணைக் கைது செய்த சிறைச்சாலை அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X