2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுற்றுலாத்துறை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்

George   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

சர்வோதயத்தின் யாழ்ப்பாண மாவட்ட நிலையத்தால் 2016ஆம் ஆண்டுக்கான, சுற்றுலாத்துறை மற்றும் தொழில்நுட்பவியல் இலவச பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இணைப்பாளர் சிறி யுகேந்திரா, இன்று வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த இருபாலாரும் இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

6 மாதகாலங்களைக் கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு பயண மற்றும் சீருடை கொடுப்பனவுகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் யாழ். மாவட்டத்திலுள்ள பிரபலமான விருந்தினர் விடுதிகளில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படும்.

விண்ணப்பங்களை (சுயவிவரக்கோவை) யாழ். மாவட்ட இணைப்பாளர், சர்வோதயம், கண்டி வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம் என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X