2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுவனைக் கண்டுபிடிக்க அலைபேசி இலக்கத்தை ஆராய அனுமதி

Gavitha   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் காணாமற்போன சிறுவனை கண்டுபிடிப்பதற்கு, காணாமற்போன பின்பு சிறுவன் உரையாடிய அலைபேசி இலக்கத்தை ஆராய்வதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதவான் ஏ.ஜே.பிரபாகரன் ஜெயபுரம் பொலிஸாருக்கு வியாழக்கிழமை (31) வழங்கினார்.

ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் இராஜேந்திரன் (வயது 15) என்ற சிறுவன் கடந்த பெப்ரவரி மாதம் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் சிறுவனின் பெற்றோர் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

காணாமல்போன சிறுவன் அதன் பின்னர் சில தடவைகள் சில அலைபேசி இலக்கங்கள் ஊடாக வீட்டுக்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கதைத்துள்ளான். ஆனால் தான் இருக்கும் இடத்தை அவர் தெரிவித்து இருக்கிவில்லை என்று முறைப்பாடுகளின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த அலைபேசி இலக்கங்களை ஆராய்ந்து சிறுவன் எங்கு இருக்கின்றான் எனக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, பொலிஸார் நீதிமன்ற அனுமதியைக் கோரியிருந்த நிலையில், நீதிவான் அந்த அனுமதியை வழங்கினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X