Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்ரிக் கழகத்தினால் 'சிறுவர் துஸ்பிரயோகத்தில் இருந்து சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளினாலான கருத்தரங்கு ஒன்று நாவாந்துறை சென்மேரிஸ் சனசமூக நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) மேற்கொள்ளப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆர்.ரி.என். ராஜீவன் வளவாளராக கலந்து கொண்டு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் சிறுவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என தெளியூட்டினார்.
யாரென்று தெரியாதவர்கள் எந்த பொருட்களை தந்தாலும் அவற்றை வாங்கக்கூடாது, தனிமையில் வீட்டில் இருப்பதனை விடுத்து ஏனைய சிறுவர்களுடன் விளையாடுதல் மற்றும் பெரியோர்களின் அரவணைப்பு அவர்களின் சொல் பேச்சு கேட்டல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தால் துஸ்பிரயோகத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என எடுத்து கூறப்பட்டது.
வித்தியசமான முறையில் தொடுதல், உரசுதல் போன்றவற்றில் யாராவது செயற்பட்டால் முதலில் பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு இதன்போது சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago