2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சொல் கேளாதவர்களுக்கு அபராதமும், சிறையும்

Gavitha   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட போதும் மீளவும் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய இரண்டு பேருக்கு தலா ஒரு இலட்;சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 14 நாட்கள் கட்டாயச்சிறைத் தண்டனையும் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா புதன்கிழமை (05) தீர்ப்பளித்தார்.

கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்;பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய இரண்டு உழவு இயந்திரங்களையும் அதன் சாரதிiயையும் கைது செய்த கிளிநொச்சி பொலிசார் குறித்த இரண்டு உழவு இயந்திரங்களையும் அதன் சாரதியையும் கிளிநொச்சி நீதிமன்றில் ஆயர்படுத்தினர்.

இதன்போது, இருவரும் ஏற்கெனவே இந்தக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டமையை பொலிஸார் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து, நீதிவான் இருவருக்கும் அதிகபட்ச தண்டனையை வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X