2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சாவகச்சேரியில் 04 பஸ்கள் மீது கல்வீச்சு

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு, 04 பஸ்கள் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் 3 பஸ்கள் மற்றும் தனியார் பஸ் ஆகியவற்றின் மீது, மறைந்திருந்து இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பஸ்களில் கண்ணாடிகள் சேதமடைந்தன.

முன்னதாக நாவற்குழிப் பகுதியில் வைத்து தனியார் பஸ் மீதும், சங்கத்தானை, மட்டுவில் மற்றும் மிருசுவலி ஆகிய பகுதிகளில் வைத்து இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, வென்னப்புவ மற்றும் கம்பஹா ஆகிய போக்குவரத்துச் சாலைகளுக்குச் சொந்தமான பஸ்கள் மீதே இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X