2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் அமைக்கவும்

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிணை கருத்தில் கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைக்க சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆலாசனை வழங்கினார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த மூவர் காவல்கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியினை தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (03) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதவான், குறித்த மூவரையும் தொடர்ந்தும் 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

வைத்தியசாலை ஊழியர்கள் இரவு, பகல் பாராது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். ஊழியர்களையும், வைத்தியர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றுக்கு உள்ளது.

எனவே வைத்தியசாலை வாசலில் பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைத்து, மதுபோதையில் குழப்பம் விளைவிக்கின்றவர்களை கட்டுப்படுத்தவேண்டும் என நீதவான் ஆலோசனை வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X