2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுவர் இடிந்து விழுந்து குடும்பஸ்தர் பலி

Gavitha   / 2016 ஜனவரி 24 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை பகுதியில் பழைய சுவர் ஒன்று சனிக்கிழமை (23) இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஸ்ணன் மயூரன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதியில் இருந்த உடைந்த வீடொன்றின் சுவரை உடைக்கும் போதே,  இவர் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X