Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
“என்னைக் கொலை செய்துவிட்டு, அந்தப் பழியை, விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சுயாதீன ஆராய்ச்சியாளருமான மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“வடமாகாணத்தில் புத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன என்று தான் நாம் அண்மையில் கூறினோம். வடமாகாணத்தில் புத்த விகாரைகள் கட்டக்கூடாது, சிங்கள மக்கள் குடியிருக்கக் கூடாது, சிங்கள மக்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று அதனைத் திரித்துக் கூறி, என் மீதான பலத்த ஒரு வெறுப்பியக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
நாம் எமது பிரச்சினைகளைக் கூறக் கூடாது. அவர்கள் தருவதை ஏற்க வேண்டும் என்ற ஒரு எண்ணப்பாடே இன்று பெரும்பான்மை மக்கள் பலரிடம் இருந்து வருகின்றது. இதற்குள் அரசியலும் சேர்ந்து எனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகச் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அது மட்டுமல்ல. அவற்றைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று சி.வி குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago