Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 08 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக போராளிகள் கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, அக் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தால், ஊடக பேச்சாளர் க.துளசியின் பெயரிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் ஒன்றை நாம் விரைவில் எதிர்கொள்ள இருக்கிறோம். யுத்தத்தின் பின்னரான பத்து ஆண்டுகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் அனுகூலத்தை, தமிழினம் பயன்படுத்திகொள்ள வேண்டிய ஓர் அவசியமான தேர்தலாகவே இதனை நாம் கருதுகிறோம்.
“தமிழர்களது வாக்குகளே இதுவரையில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஆதிக்கசக்தியாக இருந்து வந்துள்ளது. அது வாக்களிப்பின் ஊடாகவும் வாக்களிப்பை தவிர்ப்பதன் ஊடாகவும் இடம்பெற்றுள்ளது.
“அந்த வகையில் பல வேட்பாளர்கள், இத்தேர்தல் களத்துக்கு வந்திருந்தாலும் இரு வேட்பாளர்களுக்கு இடையிலேயே போட்டிகள் உச்சம்பெறுகிறது. அந்தவகையில் எமது வாக்குபலத்தை சரியான முறையில் உச்ச அளவில் பிரயோகிப்பதன் ஊடாகவே எமது எதிர்கால நலன்கள், அதிகாரப்பங்கீடு, அரசியல் கைதிகளது விடுதலை, கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கும் இயல்பு நிலைமை என்பவற்றை தற்காத்துகொள்ள முடியும்.
“சர்வதேச, பிராந்திய அரசுகளுடன் இணைந்து செல்லதக்க சட்டத்தின் ஆட்சியை மதித்து நிலைநிறுத்தக்கூடிய, குறிப்பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்றுபுள்ளி வைத்து செயலாற்றக்கூடியவராக நாங்கள், சஜித் பிரேமதாஸவை கருதுகிறோம்.
“அந்த வகையில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago