Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 14 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) யாழப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், போராட்டம், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறும் யாழ்.பொலிஸார், இன்று (14) நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.
இதற்கமைய, யாழ்ப்பாணத்துக்கு அருகில், யாழ். இந்துக் கல்லூரி, யாழ் ஆளுநர் காரியலயத்துக்கு அருகில் எவ்வித எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ள முடியாதவாறு, யாழ். பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, போராட்டங்களில், எம்.கே..சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு பங்கேற்க முடியாதவாறு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், யாழின் பல பகுதிகளிலும் விசேட அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago