2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஜம்புகோளப்பட்டினம் விகாரை உண்டியல் உடைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணம், ஜம்புகோளப்பட்டிணம் விகாரையின் உண்டியல், திங்கட்கிழமை (29) இரவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், நான்கு சிறுவர்களைக் கைது செய்துள்ள இளவாலை பொலிஸார், அவர்களிடமிருந்து, 1 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த விகாரையின் உண்டியல், திங்களன்று இரவு உடைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ தினம் மாலை வேளையில் அப்பகுதியில் நடமாடிய சிறுவர்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்தததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அன்றைய தினம் இரவு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மேற்படி சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அத்துடன், அவர்கள் வசமிருந்த பணமும் மீட்கப்பட்டுள்ளது.

13 மற்றும் 14 வயதுடைய அந்த நான்குச் சிறுவர்களும், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறிய பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X