2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஜூலை கலவரத்துக்கு அஞ்சலி

Menaka Mookandi   / 2016 ஜூலை 25 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில், இன்று திங்கட்கிழமை (25), அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், '1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி கொழும்பு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நாடு பூராகவும் மாபெரும் இனக்கலவரம் வெடித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு உயிர்நீத்தவர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே, உயிர்நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X