2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

டச்சு வீதியில் வழிப்பறியில் ஈடுபடும் குழு

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி, டச்சு வீதியில், இரவு வேளைகளில், கோடாரி, கத்திகளுடன் திரியும் 7 பேர் கொண்ட குழுவொன்று, வழிப்பறியில் ஈடுபடுவதுடன், அட்டகாசமும் செய்து வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (24) இரவு, மேற்படி கும்பல் மேற்கொள்ளவிருந்த தாக்குதலில் இருந்து தப்பித்து சைக்கிளில் ஓடிய இளைஞர் ஒருவர், நிலை தடுமாறி வீழ்ந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளைஞன்,  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணம், அலைபேசி, நகை ஆகியவற்றை குறிவைத்தே இந்தக் கும்பல், வழிபறி செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X