2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டவர்கள் கைது

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் உள்ள வங்கி அதிகாரியின் வீட்டில், 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான 26 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள், இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் ​ தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டநபர்களிடம் இருந்து, திருடிய தங்க ஆபரணங்களை விற்று கொள்வனவு செய்த பொருட்களையும் 97 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் வேறு ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர், சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேகநபர் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை கொழும்பில் உள்ள நகை கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளதுடன், அந்த பணத்தை கொண்டு இரண்டு மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்துள்ளார்.

மேலும், தனது மனைவியுடன் கொழும்பில் உள்ள பிரலமான துணிக்கடையில் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடைகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X