Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 19 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கைதி, சனிக்கிழமை (18) தப்பியோடியுள்ளார்.
சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, “கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி, பருத்தித்துறைக் பகுதியில் வைத்து நகை மற்றும் பணத்துடன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுதாகரன் என்ற நபரை, பொலிஸார் கைது செய்திருந்தனர்.
விசா இல்லாது வியாபாரம் செய்த குற்றம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சிறைச்சாலையில் அவருக்குத் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது, கழிவறைக்கு சென்றவர், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை எனத் தேடிய போது, அவர் அங்கிருந்து தப்பியோடியமை தெரியவந்துள்ளது.
37 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
5 hours ago