Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு நேற்று (04) விஜயம் மேற்கொண்ட ஆளுநர் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் நல்லிணக்க ரீதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நல்லிணக்க செயற்பாடுகளுக்கமைவாக பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதையும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் படையினரால் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை பாராட்டிய ஆளுநர், மேலதிகமாக தற்போது பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பாதுகாப்பு கேந்திர ஸ்தானத்தில் அக்காணிகள் இருக்கும் பட்சத்தில் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவற்றுக்கு மாற்றீடான நடவடிக்கைகளை மேற்கொண்டு யாழ் மாவட்டத்தில் காணப்படும் குறித்த காணிப்பிரச்சனைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருமாறும் ஆளுநர் கட்டளைத்தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
2 hours ago