2025 மே 09, வெள்ளிக்கிழமை

தனுரொக் மீது வாள்வெட்டு: வினோதன் சரணடைந்தார்

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த வினோதன் என்பவர், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று (30) சரணடைந்தைத் தொடர்ந்து, அவரை ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் - மணிக்கூட்டு வீதி, பெருமாள் கோவிலடியில் வைத்து, சனிக்கிழமையன்று (26), கார் ஒன்றில் வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த சிலர், மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனுரொக் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கொக்குவிலைச் சேர்ந்த மோகன் அசோக் என்பவர், ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து, மறுநாள் திங்கட்கிழமை, மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X