2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘தமிழினத்தின் அடையாளத்தை அழிக்க சதி’

Editorial   / 2019 மார்ச் 04 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

ஈழத் தமிழினத்தின் அடையாளத்தை அழித்து இருப்பை இல்லாமல் செய்கின்ற திட்டமிட்ட சதி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்ற போது மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் வாய்மூடி மௌனிகளாக இருக்காமல் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டுமென ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இருப்பதெல்லாம் மதப்பிரச்சனையே, இங்கு இனப்பிரச்சனையென்ற ஒன்றே இல்லை என்பதை வெளிக்காட்டுவதற்காகவே தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழிலுள்ள அவரது இல்லத்தில் இன்று(04) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்தமதத்தவர்கள் இருக்கின்ற விபரங்களைத் தருமாறும் அதனை பௌத்த மக்களின் பிரதேசமாக அறிவிக்குமர்றும் மாகாணத்திலுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளரினால் அண்மையில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கும் இடங்களில் அவர்கள் விகாரைகளை அமைத்தள்ளனர். அவ்வாறு சில இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய போதும் அந்த இடங்களில் கூட தற்போதும் விகாரைகள் காணப்படுகின்றன.

ஆகவே அந்த இடங்களை பௌத்த கிரமங்களாக அடையாளப்படுத்தப் போகின்றனரா? அவ்வாறு மாற்றுவதன் நோக்கம் என்ன எனவும் கேள்வி யெழுப்பியுள்ளார்.

தமிழர் தயாகப் பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களினால் வலிந்து விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு விகாரைகள் அமைக்கும் செயற்பாடுகள் தற்போதும் தொடர்கின்றன.  இந்தவிடயத்தைப் பொறுத்த வரையில் கடந்த தேர்தலின் போது வடக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போதாக பிரதமர் குறிப்பிட்டிருந்ததற்கமைவாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என கேட்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X