Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், மனோகராச் சந்தியில் வீதியோரத்தில் தளபாடங்களை வைத்து விற்பனை செய்யும் வியாபாரியின் தளபாடங்களை திருடிச் சென்ற நபரை சி.சி.ரி.வி கெமராவின் உதவியுடன், நேற்றுப் புதன்கிழமை (03) கைது செய்ததாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னிலங்கையைச் சேர்ந்த வியாபாரியொருவர், மனோகராச் சந்தியில் வைத்து தளபாடங்களை விற்பனை செய்து வருவதுடன், இரவில் அதேயிடத்தில் அவற்றை களஞ்சியப்படுத்திவிட்டு அதற்கு அருகில் தானும் தூங்குவதை வழமையாகக் கொண்டுள்ளார்.
கடந்த 1ஆம் திகதி இரவு வியாபாரி தூங்கியதும், அவர் வைத்திருந்த 6 நிலைக்கண்ணாடிகள் மற்றும் உடைகளைக் கொளுவும் 12 தளபாடங்கள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பில் வியாபாரி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, கடையொன்றில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கெமராவின் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
அதில் ஒருவர, சிறியரக லொறியில் வந்து தளபாடங்களை ஏற்றிச் சென்றது பதிவாகியிருந்தது. இதனையடுத்து, நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர் என்பதுடன், நாவாந்துறையில் திருமணம் செய்து வாழ்ந்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது.
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago