2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தாக்குதலுக்குள்ளான மாணவனிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்    

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் போது போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் மாணவனிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (31) விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனித  உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ்,

மாணவன் தாக்கப்பட்ட விடயம்  தொடர்பில் பொலிஸாரின் இதுவரையான நடவடிக்கை  பற்றிய அறிக்கை ஒன்றை கோரவுள்ளதாகவும், தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்  இந்த விடயத்தில்  பொலிஸாரின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, எனவே தாம் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கையினை பெறுவதோடு, மாணவனின் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவோம் என குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X