2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 07 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நல்லூர் பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சசிகரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

குறித்த நபர் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை மதியம் ஊரெழு பகுதியில் உள்ள தோட்டமொன்றில் புல்லு வெட்டிக்கொண்டு இருந்த சமயம் மதிய நேரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X